ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா தாக்குதல் இருக்கும் - டிரம்ப் தகவல்

" alt="" aria-hidden="true" />

 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்குவரும் என கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த டிரம்ப், '' நாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் முடிவுக்கு வரும்’’ என்றார்


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரி - உலக சுகாதார அமைப்பு தகவல்
Image
வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா - கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்
Image